திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் திருப்பத்தூர் உழவர் சந்தை அருகே பாதாள சாக்கடை மூடி ஒன்று உயரமாக உள்ளது. இதனால் அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடியின் உயரத்தை சற்று குறைத்து அமைக்க வேண்டும்.
-முனீர், திருப்பத்தூர்.