கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி

Update: 2024-09-22 20:33 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கடலாடி புதிய காலனி பகுதியில் பிள்ளையார் கோவில் அருகில் கழிவுநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இது, அந்த வழியாக செல்வோருக்கு சிரமமாக உள்ளது. சிறுவர்-சிறுமிகள் பள்ளத்தில் விழுந்து விடுவார்கள் என்ற அச்சம் உள்ளது. கால்வாய் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், கடலாடி. 

மேலும் செய்திகள்