மூடப்படாத கழிவுநீர் கால்வாய்

Update: 2022-08-18 16:12 GMT

கிருஷ்ணகிரி நகராட்சி 22-வது வார்டு வேடியப்பன் கோவில் தெருவில் மழலையர் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளிக்கு தினமும் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கிறார்கள். அந்த பள்ளி முன்பு கழிவுநீர் கால்வாய் மூடப்படாமலும், சுத்தம் செய்யாமலும் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளதால் குழந்தைகள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கால்வாயை மூடி, சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துசுவாமி, 22-வது வார்டு, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்