கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை முதல்நிலை ஊராட்சி எச்சம்பட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலைகளில் செல்கிறது. இதனால் தெருக்களில் நடக்க முடியாதபடி துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.
-சுப்பிரமணி, கிருஷ்ணகிரி.