கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட நித்திரவிளை, தெங்கம்பள்ளி சாலையில் போதிய வடிகால் வசதி இல்லை. மழைக்காலங்களில் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையில் தண்ணீர் தேங்காதவாறு வடிகால் ஓடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜி. ரமேஷன். நித்திரவிளை.