நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி ஆறாக ஓடுகிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் சாலையில் செல்லாத வகையில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவா, ராசிபுரம், நாமக்கல்.