மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2022-08-04 10:44 GMT

நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் குட்டை தெரு அமைந்து உள்ளது. இந்த தெருவில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. தெருவில் மழைநீர் கால்வாய் இல்லாத காரணத்தால் லேசான மழை பெய்தால்கூட சாலை மற்றும் வீதிகளில் கழிவுநீருடன்  மழைநீரும் கலந்து தேங்கி நிற்கிறது. சில நேரங்களில் வீடுகளிலும் தண்ணீர் புகுந்து விடுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மழைநீர் கால்வாய் வசதியை ஏற்படுத்தி தண்ணீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலா, நாமக்கல்.

மேலும் செய்திகள்