கரூர் விநாயகர் கோவிலை அடுத்த காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நீண்ட நாட்களாக பிளாஸ்டிக் கவர்கள், டீ கப்புகள் போன்றவை கொட்டப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதினால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.