சாலையில் பள்ளம்

Update: 2022-08-01 12:15 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே அரசு மருத்துவமனை மற்றும் சி.எஸ்.ஐ. பள்ளி பகுதியில் பாதாள சாக்கடை மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறுகிறது. அங்குள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கழிவுநீரில் தவறி விழுந்து விடுகின்றனர். அதே சாலையில் கோ-ஆப் டெக்ஸ் அருகில் பெரிய அளவிளான பள்ளங்கள் உள்ளன. அசம்பாவிதம் ஏற்படும் முன் பாதாள சாக்கடை பராமரிப்பு துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் இணைந்து அதை சீர் செய்ய வேண்டும்.
மணிகண்டன். அரக்கோணம்

மேலும் செய்திகள்