கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எலசேபள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் சாக்கடை கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லவே மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அங்கு சாக்கடை கழிவுநீர் தேங்காதபடி சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவா, எலசேபள்ளி, கிருஷ்ணகிரி.