தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அழகர் திருமண மண்டபம் எதிரில் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.அருகில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் பயன்படுத்தக்கூடிய அனைத்து கழிவுகளும் திறந்தவெளியில் சாலையில் வழிந்தோடுவதால். அந்த பகுதியில் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை