தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளை பரும்பு பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தெருக்களில் சாக்கடை கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. இதனால் தொற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாறுகால் அமைத்து கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.