விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி காட்சிப்பொருளாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.