குஜிலியம்பாறை தாலுகா டி.கூடலூர் கடைவீதி பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் வழிந்தோடும் வகையில் வடிகால் வசதி செய்யப்படவில்லை. இதனால் மழை பெய்யும் சமயங்களில் எல்லாம் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்குகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்து கூட சாலை முழுவதும் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். எனவே வடிகால் வசதியை உடனே ஏற்படுத்த வேண்டும்.