தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பெரிய தம்பி நகர் உள்ளது. இதன் அருகில் உள்ள தேப்பெருமாநல்லூர் வாய்க்காலில் மழைநீர் செல்லும் வாய்க்கால் அமைந்துள்ளது. ஆனால் வாய்க்கால் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டியதால் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை நீர் செல்ல வசதியாக வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் கும்பகோணம்.