திருச்சி மாநகராட்சி, அரியமங்களம், காட்டூர், திருவரம்பூர், துவாக்குடி போன்ற நகரங்களில் இருந்து வரும் கழிவுநீர் உய்யகொண்டன் ஆற்றில் கலப்பதால் மிகவும் மாசடைந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த ஆற்றில் ஆகாய தாமரை செடிகள் அதிக அளவில் முளைத்துள்ளதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.