நாமக்கல்லில் இருந்து பொய்யேரிக்கரை சாலை வழியாக திருச்செங்கோடு செல்லும் சாலை உள்ளது. அந்த சாலையின் ஓரத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கியுள்ளன. அதனால் அங்கு கழிவுநீர் தேங்குவதால், துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே அங்குள்ள சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தேங்காமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயமோகன், நாமக்கல்.