நோய் பரவும் அபாயம்

Update: 2022-07-28 12:10 GMT

நாமக்கல்-திருச்செங்கோடு சாலை நல்லிபாளையம் மேம்பாலம் அருகே சாலையோரமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. போதிய வடிகால் வசதி இல்லாததே கழிவுநீர் தேங்குவதற்கு முக்கிய காரணம் ஆகும். எனவே வடிவால் வசதி ஏற்படுத்தி கழிவுநீர் தேங்குவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்தி, நல்லிபாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்