கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு

Update: 2022-07-27 16:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர் கூட்ரோடு வரை சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து அதன்மீது கடைகளும், கால்வாயின் மீது சிமெண்டு தரைதளம் அமைத்தும் அடைத்துவிட்டனர். இதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் சிரமத்தோடு செல்கின்றன. எனவே கழிவுநீர் கால்வாய் மீது அமைத்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபாகரன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்