கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ராஜீவ் காந்திநகரின் ஒரு பகுதியில் மட்டும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வரும் கழிவுநீர் மற்ற தெருக்களின் வழியாக செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மற்ற தெருக்களுக்கும் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நரசிம்மன், ராஜீவ் காந்திநகர், கிருஷ்ணகிரி.