தஞ்சை பஸ் நிலையம், ரெயில்நிலையம் மற்றும் நகரில் பல்வேறு இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் தஞ்சை