ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாாிகள் விரைந்து கழிவுநீர் வழிந்தோட வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.