நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் சமீபத்தில் பெய்த கனமழையில் அடித்த காற்றில் கிராயூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஒரு புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதில் பேட்டபாளையம் ஊராட்சி பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே இந்த மரத்தை அகற்றி கழிவு நீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?