சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், ஓமலூர், சேலம்.