சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சந்தப்பேட்டை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவு நீர் அடிக்கடி வெளியேறி சாலையில் செல்கிறது. இதை அவ்வபோது சுத்தம் செய்து விடுகிறார்கள் ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. இதனால் இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வுகான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-.தினேஷ்குமார், சேலம்.