சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2023-04-02 17:08 GMT

சேலம் 6-வது வார்டு ஸ்ரீராம் நகரில் கழிவுநீர் கால்வாய் சரிவர அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் சாக்கடை கால்வாய் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேகர், ஸ்ரீராம் நகர், சேலம்.

மேலும் செய்திகள்