பொதுகழிவறை பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-07-20 15:10 GMT


தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சானூரப்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்கின்றன. இதனால் எந்த நேரமும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். சானூரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் பொதுக்கழிவறை கட்டப்பட்டு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுகழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.

பொதுமக்கள், சானூரப்பட்டி.

மேலும் செய்திகள்