பள்ளி முன்பு தேங்கும் கழிவுநீர்

Update: 2022-07-17 18:05 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த வெள்ளை பிள்ளையார் கோவிலில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி எதிரே உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

-சந்திரன், வெள்ளை பிள்ளையார் கோவில், நாமக்கல்.

மேலும் செய்திகள்