ஓசூர் மாநகராட்சி பழைய அன்னை சத்யா காலனியில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டன. அந்த பணிகள் நிறைவடைந்து 20 நாட்களாகியும் இதுவரை பள்ளத்தை மூடாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் திறந்தவெளியில் பாதாள சாக்கடையால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தர், ஓசூர்.