சேலம் மாவட்டம் தேவூர் பேரூராட்சி பகுதியில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் கால்வாய் அமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதால் குழிகளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகமாகி உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் அந்த வழியே செல்லும் போது கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சூர்யா, தேவூர், சேலம்.