நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-30 17:40 GMT

சேலம் வட்ட முத்தம்பட்டி ஊராட்சி இரும்பாலை போலீஸ் நிலையம் அருகே காவிரி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாய் அமைந்துள்ள பகுதியில் சாக்கடை கழிவுநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. இதனால் குடிநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து வீடுகளுக்கு செல்கிறது. எனவே அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் பகுதியில் சாக்கடை நீரை அகற்றி சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

-மங்களம், ராஜாவட்ட முத்தம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்