கழிவுநீர் சாலையில் ஓடியதை படத்தில் காணலாம்
தஞ்சை-நாகை சாலையில் பல்வேறு இடங்களில் உள்ள பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இந்த சாலை வழியாகத்தான் புன்னைநலலூர் மாரியம்மன் கோவில், திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி போன்று ஊர்களுக்கு செல்ல வேண்டும். இந்த நிலையில் ஜோதி நகர், அருகே பிரதான சாலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார் சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீர் வடியாமல் மூடி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சாவூர்.