சேலம் மாவட்டம் 51-வது வார்டு அன்னதானப்பட்டி, சாஸ்திரி நகர், பாரதி மருத்துவமனை செல்லும் வழியில் உள்ள சாக்கடை கால்வாய் மிகவும் சேதமடைந்துள்ளது. மழைகாலங்களில் மழை நீர் அப்பகுதி முழுவதும் தேங்கி விடுகிறது. சாக்கடை கால்வாயின் மேல்பகுதி, அதன் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயையும், மின்கம்பத்தையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன் குமார், அன்னதானப்பட்டி, சேலம்.