நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையம் அருகில் பழமையான மணிக்கூண்டு ஒன்று அமைந்துள்ளது. பஸ்கள் சென்று வரும் நேரத்தை அறியவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் அந்த மணிக்கூண்டு அங்கு அமைக்கப்பட்டது. தற்போது அந்த மணிக்கூண்டு மழை, வெயிலால் சேதமாகி காணப்படுகிறது. அதில் எழுதப்பட்டு இருந்த வாழ்க தமிழ் என்ற எழுத்தும் மறைந்து போய் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து மணிக்கூண்டை புதுப்பிக்க வேண்டும்.
-ஜவகர், சேந்தமங்கலம், நாமக்கல்.