நாமக்கல்லில் இருந்து வரும் கழிவு நீர் அனைத்தும் விசாணம் ரோட்டில் உள்ள வாய்க்கால் வழியாக சென்று வேட்டாம்பாடி ஏரியில் கலக்கிறது. இந்த பாதை தூர்வாரப்படாமல் இருப்பதால் சாக்கடை நீர் வயல்வெளியில் நிரம்பி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இதுகுறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த பாதையை தூர்வாரி கழிவுநீர் முறையாக செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விணோத், நாமக்கல்.