நாமக்கல் மாவட்டம் தலைமை அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள், நோயாளிகள் பயன்பாட்டுக்காக ஆண்கள் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அந்த கழிப்பிடம் பராமரிப்பில்லாமல் சுகாதாரமற்று காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் கழிப்பிடத்தை பயன்படுத்த முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து கழிப்பிடத்தை சுத்தம் செய்து தூய்மையாக வைக்க வேண்டும்.
-பிரபாகரன், குரும்பப்பட்டி, நாமக்கல்.