கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி ராஜீவ் நகர் 2-வது தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த தெருவில் சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும்.
-அகிலா, பெத்ததாளப்பள்ளி, கிருஷ்ணகிரி.