திருப்பத்தூர் ஒன்றியம் பால்னாங்குப்பம் பகுதியில் வெங்காயப்பள்ளி செல்லும் சாலையில் இருந்து பால்னாங்குப்பம் புதூர் வழியாக ஆதிதிராவிடர் காலனி வரை செல்லும் தார் சாலை மற்றும் பால்னாங்குப்பம் பஜனை கோவிலில் இருந்து ராஜன்வட்டம் வரை செல்லும் தார்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. அந்தச் சாலைகளில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பழுதடைந்த சாலைகளை அபிவிருத்தி திட்டத்தில் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துக்குமார், பால்னாங்குப்பம்.