குண்டும் குழியுமான சாலை

Update: 2026-02-22 18:28 GMT

அரக்கோணம் நாகாலம்மன் நகர் பகுதியில் திருத்தணி ரோட்டில் இருந்து கைனூர் கிராமம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்துக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மோட்டார் சைக்கிள்கள், இதர வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. பள்ளி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்துத் தர வேண்டும்.

-குமரேசன், அரக்கோணம்.

மேலும் செய்திகள்