தென்காசியில் இருந்து சுரண்டை நோக்கி செல்லும் பிரதான சாலையில் சாம்பவர் வடகரை பகுதியில் உள்ள பள்ளியின் அருகே 2 வேகத்தடைகள் இருந்தன. அதேபோல் அங்குள்ள போலீஸ் நிலையம் முன்பு ஒரு வேகத்தடையும், அகஸ்தியர் கோவில் முன்பு 2 வேகத்தடைகளும் இருந்தன. ஆனால் கடந்த ஆட்சியில் முதல்-அமைச்சர் வருகைக்காக 5 வேகத்தடைகளும் அகற்றப்பட்டன. முக்கிய சாலையான அங்கு மின்னல் வேகத்தில் வாகனங்கள் செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் அங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டுகிறேன்.