சேலம் அன்னதானப்பட்டி முதல் கொண்டலாம்பட்டி பைபாஸ் வரை உள்ள சங்ககிரி மெயின் ரோடு மிகவும் அகலமான சாலை ஆகும். இங்கு பாதசாரிகள் நடப்பதற்கு என்று பிளாட்பாரம் அமைக்கப்பட்டு மிக அழகாக கட்டமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்சமயம் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் செய்து போக்குவரத்து நெரிசல் அதிகம் நிலவி வருகிறது. மேலும் இரவு நேரத்தில் சில்லி கடைகள் போடுவதால் அதில் கூட்டம் கூடி பெண்கள் சுதந்திரமாக நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.