குண்டும் குழியுமான சாலை

Update: 2026-11-01 17:35 GMT
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த திருமுட்டம் அருகே வடக்குப்பாளையத்தில் உள்ள சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி விழுந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர். மேலும் வாகனங்களும் அடிக்கடி பழுதடைந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். வாகனஓட்டிகள் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குண்டும் குழியுமான சாலையை சரிசெய்து புதிதாக அமைத்து தர வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்