விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மம்சாபுரம் செல்லும் சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தட சாலையினை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?