மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா குட்லாடம்பட்டி முதல் சமத்துவபுரம் நீர்வீழ்ச்சி வரை சுமார் 5 கி.மீ. அளவு சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து பஸ்சுக்காக சென்று வருவதால் மிகவும் அவதி அடைகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் நீர் தேங்கி பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயமடைகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்.