மதுரை-மேலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிட்டம்பட்டி கிராமத்தில் பெண்கள் கல்லூரி அருகில் வேகத்தடை இல்லாததால் விபத்துக்கள் நடந்து வருகிறது. வாகனங்களில் செல்பவர்கள் அதிவேகத்தில் பயணிப்பதால் மாணவிகள், பெண்கள் சாலையை கடக்க அச்சம்அடைகின்றனர். மேலும் முதியோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி இப்பகுதியில் வேகத்தடை வசதி அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும்.