வேகத்தடையால் விபத்து

Update: 2026-11-01 14:36 GMT

நாமக்கல் நகரில் திருச்சி செல்லும் சாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அருகில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த இடத்தில் வேகத்தடை உள்ளது. இரவு நேரத்தில் அங்கு வேகத்தடை இருப்பது அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. மேலும், திருச்சி சாலையில் வேகமாக வரும் வாகனங்களும் அந்த இடத்தில் தடுமாறி செல்வதை இரவு நேரத்தில் காண முடிகிறது. எனவே அந்த இடத்தில் வேகத்தடையை அகற்ற வேண்டும் அல்லது வேகத்தடையை குறிக்கும் வகையில் இரவில் ஒளிரும் அறிவிப்பு பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்