தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரியாம்பட்டி ஊருக்குள் செல்லும் மாநில நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், இருபுறமும் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. தற்போது பெரியாம்பட்டி-திப்பம்பட்டி ரோட்டிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இந்த ரோட்டில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க முடியாமலும், விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.