செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் சதானந்தபுரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் அதிகமான வாகனங்கள் வந்துசெல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே இந்த சாலையை கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.