திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை தொழிற்பேட்டையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த பகுதியில் பெரும்பாலானா தெருக்களில் பெயர் பலகை இல்லாமலும், சேதமடைந்தும் உள்ளன. இதனால் இந்த பகுதிக்கு வரும் தபால் மற்றும் டெலிவரி ஊழியர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.