பயணிகள் அச்சம்

Update: 2026-11-01 06:30 GMT

திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரி ரெயில் நிலையத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் வந்துசெல்வார்கள். இந்த ரெயில் நிலையம் அருகே ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அச்சத்துடனே வருகின்றனர். மேலும் சில சமயங்களின் தெரு நாய்கள் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை குரைத்து, துரத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்